ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பழம்பெரும் வீணை இசை கலைஞர் சிட்டிபாபுவின் மகன் சுந்தர்.சி பாபு. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு அஞ்சாதே, நாடோடிகள், சிந்து சமவெளி, தூங்கா நகரம் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். கடைசியாக போராளி படத்திற்கு இசை அமைத்திருந்தார். அதன் பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு, கன்னட படங்களுக்கு இசை அமைத்தார்.
மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அட்டி என்ற படத்திற்கு இசை அமைக்கிறார். இதனை சுராஜ் உதவியாளர் விஜயபாஸ்கர் இயக்குகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளர் மா.பா.க ஆனந்த் ஹீரோவாக நடிக்கிறார். அஷ்மிதா ஹீரோயினாக நடிக்கிறார். ராம்கி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வெங்கடேஷ் அர்ஜூன் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஒருவனின் வாழ்க்கை கதைதான் அட்டி.