'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1981ம் ஆண்டு பிறந்த அனுஷ்காவுக்கு இப்போது 33 வயது நடக்கிறது. ஆனால் ஸ்வீட்டி ஷெட்டியாக இருந்த அவர், அனுஷ்காவாக மாறி சினிமாவில் அறிமுகமானார். ஆக, ஜூலை 21ம் தேதியோடு 9 ஆண்டுகள் முடிந்து 10ஆவது ஆண்டில் அவர் அடியெடுத்து வைத்திருக்கிறார். 10 ஆண்டுகளான தன்னோட திரையுலக பயணத்தை திரும்பிப்பார்த்த அனுஷ்கா, ஆரம்பம் முதல் இப்போது வரை துளியும் தொய்வில்லாமல் தனது மார்க்கெட் சீராக சென்றதை பெருமையோடு அசை போட்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கில் மட்டுமே இதுவரை நடித்துள்ள அனுஷ்கா, இரண்டு மொழிகளிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். தமிழைப்பொறுத்தவரை ரஜினி, கமல், அஜீத்துடன்தான் அவர் ஜோடி சேராமல் இருந்தார். அதில் ரஜினி, அஜீத்துடன் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். கமல் மட்டும் பாக்கி உள்ளார். அந்த வாய்ப்பும் சீக்கிரமே கைகூடும் என்று நம்புகிறார் அனுஷ்கா.
இந்த நிலையில், ஜூலை 21-ந்தேதி தான் 10ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்ததை ராணி ருத்ரம்மா தேவி படப்பிடிப்பில இருந்தபோது கேக் வெட்டி விமரிசையாக கொண்டாடிய அனுஷ்கா, அன்றைய தினம் மதிய வேளையில் யூனிட்டாருக்கு மணக்க மணக்க ஐதராபாத் பிரியாணி பரிமாறி மகிழ்சசியை பகிர்ந்து கொண்டுள்ளார். அதோடு, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் என அனைவருக்குமே நன்றி தெரிவித்தும் மெசேஜ் பண்ணியுள்ளார் அனுஷ்கா.