தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்தும் முதல்வரிசைக்கு வராமல் இருக்கும் நடிகர் விதார்த். மைனா படத்துக்குப் பிறகு பல படங்களில் இவர் நடித்தாலும், அப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. எனவே விதார்த்தின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் விதார்த்துக்கு அவற்றில் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்த படம் - ஆள்.
இந்தப் படத்துக்கு முதலில் அமீர் என்று பெயர் வைத்தனர். அதற்கு இயக்குநர் அமீர் ஆட்சேபம் தெரிவித்த காரணத்தினால் பின்னர் ஆள் என்று பெயர் மாற்றம் செய்தனர். படத்தின் தலைப்பில் மாற்றம் செய்தாலும், விதார்த் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர் அமீர் என்பதில் மாற்றம் செய்யவில்லை. இப்படத்தை ஆனந்த் கிருஷ்ணா புதுமுக இயக்குநர் இயக்கி இருந்தார். சௌந்தர்யன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் விடியல் ராஜு என்பவர் தயாரித்து இருந்தார். ஆள் படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்த ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார், படம் சூப்பராக இருக்கிறது என்று பாராட்டியதோடு, ஆள் படத்தின் தமிழக உரிமையை தானே வாங்கிக் கொண்டார்.
வேறு சில படங்களையும் அவர் வாங்கி இருந்ததினால் அவற்றை ரிலீஸ் செய்த பிறகு ஆள் படத்தை ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளரிடம் கூறி இருக்கிறார் சதீஷ்குமார்.
அவர் சொன்னதை நம்பி மாதக்கணக்கில் காத்திருந்தார் ஆள் படத்தின் தயாரிப்பாளரான விடியல் ராஜு. சதீஷ் சொன்னபடி ஆள் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்யவில்லையாம். எனவே அக்ரிமெண்ட்டை கேன்சல் பண்ணிவிட்டு, தானே ஆள் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார் விடியல் ராஜு. இதற்கிடையில், சி2ஹெச் நிறுவனத்துக்கு ஆள் படத்தின் டிவிடி உரிமையை தருவதாக கூறி இருந்தார் சதீஷ்குமார். அதற்கு உடன்பட மறுத்துவிட்டாராம் விடியல் ராஜு.