ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அபிநயா. மாற்றுத் திறனாளி நடிகை. அதன் பிறகு ஈசன் படத்தில் நடித்தார். இங்கு போதிய வாய்ப்புகள் இல்லாமல் மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். இப்போது பூஜை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
ஹரி இயக்கும் இந்தப் படத்தில் அபிநயா விஷாலின் ஒன்றுவிட்ட சகோதரியாக நடிக்கிறார். இதுகுறித்து அபிநயாவின் தந்தை கூறும்போது... "அபிநயா இப்போது மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அங்கு ஹீரோயினாகவும் நடிக்கிறார். கேரக்டர் ரோல்களிலும் நடிக்கிறார். பூஜை படத்தில் அவர் ஹீரோயின் இல்லை. ஆனால் கதைக்கு மிக முக்கியமான கேரக்டர். அவரை ஒட்டியே படத்தின் கதை நகரும். மீண்டும் தமிழில் நடிக்க வந்திருப்பது அபிநயாவுக்கு மிகவும் சந்தோஷம்" என்றார்.