மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நாளை (ஏப் 25) 7 படங்கள் ரிலீசாகிறது. இதில் கார்த்திக் மகன் கவுதம், மம்முட்டி மகன் துல்கரின் படங்கள் மோதுகிறது. தேர்தல் பரபரப்பு அடங்குவதாலும் இன்னும் இரண்டு வாரத்தில் கோச்சடையான் ரிலீசாக இருப்பதாலும் இந்த வாரம் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு சரியான நேரம் என்பதால் 7 படங்கள் வரை ரிலீசாகிறது.
கவுதம் கார்த்திக், நிகிஷா படேல், ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள படம் என்னமோ ஏதோ, சூப்பர் ஹிட்டான ஆல முதலாந்தி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். ரவி தியாகராஜன் இயக்கி உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். பி.வி.பிரசாத் தயாரித்து உள்ளார். கடல் படத்துக்கு பிறகு வரும் கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம். கடல் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்தப் படத்தின் முடிவு கவுதமின் கேரியரை முடிவு செய்ய இருக்கிறது.
காதலில் சொதப்புவது எப்படி படத்துக்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கி உள்ள படம் வாயை மூடி பேசவும். தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி உள்ள இந்தப் படத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நாசிம் நடித்திருக்கிறார். பாலாஜி மோகனின் இரண்டாவது படம், துல்கர் சல்மான் தமிழுக்கு அறிமுகம். திருமண அறிவிப்புக்கு பிறகு வரும் நஸ்ரியா படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படத்திற்கு இருக்கிறது.
இதுதவிர ராமகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள போங்கடி நீங்களும் உங்க காதலும் ரிலீசாகிறது. பிரச்னைக்குரிய தலைப்பு, முத்தக் காட்சி பிரச்னை என செயற்கையான பரபரப்புகளை கிளப்பி விட்டு ரிலீசாகிறது.
வசந்த் அண்ட் கோ அண்ணாச்சியின் மூத்த மகன் விஜய வசந்த் நடிக்க இளைய மகன் வினோத் குமார் தயாரித்துள்ள திகில் படம் என்னமோ நடக்குதுவும் நாளை ரிலீஸ். சாட்டை மகிமா ஹீரோயின். பி.ராஜபாண்டி இயக்கம். சோலோ ஹீரோவாக ஒரு வெற்றிக்கு ஏங்கும் விஜய் வசந்திற்கு இது முக்கியமான படம்.
இதுதவிர விடுமுறையை குறிவைத்து வெளியாகும் ஹாலிவுட் படமான அமேசிங் ஸ்பைடர் மேன் 2வும், இயேசு பிரானின் வாழ்க்கையை சொல்லும் சன் ஆஃப் காட் படமும், நர நாயகி என்ற ஹாலிவுட் படமும் ரிலீசாகிறது.