ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வசதி இல்லாத ஏழை குழந்தைகள் படிப்பதற்காக ஒரு பள்ளி தொடங்க வேண்டும் என்பது ஜாக்கிசானின் நீண்டகால ஆசையாம். அதனால் தனது டிராகன்ஸ் ஹார்ட் என்ற அறக்கட்டளை மூலம் ரசிகர்களிடம் நிதி திரட்டி அந்த பள்ளியை தற்போது கட்டத் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே ரசிகர்கள் அவரது அறக்கட்டளைக்கு நிதி கொடுத்து வரும் நிலையில், சமீபத்தில் பீஜிங், ஷாங்காய் போன்ற பகுதிகளுக்கு அவர் சென்றபோது அங்குள்ள ஏராளமான ரசிகர்கள் நிதி கொடுத்தார்களாம்.
அதையடுத்து, இதுவரை சேர்ந்த நிதியை எண்ணும் பணியில் இறங்கிய ஜாக்கிசான், 90 ஆயிரம் ஹாங்காங் டாலர்கள் சேர்ந்திருப்பதைக்கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தாராம். அதையடுத்து தனது சார்பிலும் 90 ஆயிரம் டாலர்களை அந்த நிதியோடு சேர்த்து விட்டாராம்.
அதுமட்டுமின்றி, தனது நடிப்பில் வெளியான சி இசட் 12 படத்தின் மேக்கிங் புத்தகத்தை ரசிகர்களிடம் விற்பனை செய்த வகையில் கிடைத்த 50 ஆயிரம் ஹாங்காங் டாலர்களையும் இப்போது அந்த நிதியோடு சேர்த்துள்ளாராம் ஜாக்கிசான். ஆக, 2 லட்சத்து 30 ஆயிரம் ஹாங்காங் டாலர்கள் அவர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கான நிதியாக சேர்ந்துள்ளதாம்.
இந்த தொகை, இந்தியன் ரூபாயில் 18 லட்சமாம்.