மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தேர்தல் நேரத்தை மனதில் வைத்து டைமிங்காக ஒரு படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். தலைப்பு என்ன தெரியுமா? “காதல் முன்னேற்றக் கழகம்”. கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட பல படங்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் விநியோகம் செய்திருக்கிற மதி மீடியா எண்டர்டைனர்ஸ் பட நிறுவனம் சார்பாக சஞ்சித் சிவா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக விவந்த் நடிக்கிறார். இவர் இருக்கு ஆனா இல்லை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சோனி செறிஸ்டா நடிக்கிறார். இஞ்சி முறப்பா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கிய வேடத்தில் ரோபோ சங்கர் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் அத்தனை பேருமே புது முகங்களே. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரஜய் சிவநேசன். இவர் சூப்பர்குட் பிலிம்ஸ், டூயட் மூவீஸ், எஸ்.பி.பி.சரண் தயாரித்த பல படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்.
ரொமான்டிக் திரில்லர் படமாக உருவாகிறது காதல் முன்னேற்றக் கழகம். மே மாதம் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி 30 நாட்கள் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.