ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உடல் நலக்குறைவால் இயக்குநர் குரு தனபால் காலமானார். அவருக்கு வயது 55. உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் குரு தனபால். தொடர்ந்து தாய் மாமன், மாமன் மகள், பெரிய இடத்து மாப்பிள்ளை, பெரிய மனுஷன் போன்று சில படங்களை இயக்கியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறைந்த பின்னர் தனது சினிமா நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்ப்பதற்காக அடிக்கடி கோவை வந்து சென்றுள்ளார் குரு தனபால்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை வந்த குரு தனபாலுக்கு, தமிழ்புத்தாண்டு அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஏப்ரல் 18ம் தேதி) இறந்தார். சென்னையில் வசித்து வரும் குரு தனபாலுக்கு உமாதேவி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். குரு தனபாலின் உடல் கோவையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதிசடங்கு நாளை(ஏப்ரல் 19ம் தேதி) பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மின்மயானத்தில் நடக்கிறது.