இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மறந்தேன் மன்னித்தேன் படத்தில் நடித்தவர் சந்தீப் கிஷன். இப்போது யாருடா மகேஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் தெலுங்கு நடிகரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் என்ற சாலையில் கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது, எதிரில் வேகமாக ஒரு பெண் ஓட்டி வந்த கார் இவரது கார் மீது பயங்கரமாக மோதியதாம். இதையடுத்து சந்தீப்பையும், அந்த பெண்ணையும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்து காருக்குள் இருந்து வெளியே எடுத்து காப்பாற்றியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த பெண் அப்போது குடி போதையில் இருந்திருக்கிறார். இருப்பினும், கார் மோதலில் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அதனால், இதுகுறித்து அந்த பெண் மீது காவல் துறையில் புகார் அளிக்கவில்லையாம் சந்தீப் கிஷன். மறப்போம் மன்னிப்போம் என்று அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பி விட்டாராம்.