Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு

01 ஜூன், 2023 - 21:57 IST
எழுத்தின் அளவு:
vadivelu-says-Best-movie-for-me-after-Devar-Magan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்டுள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்த மாதம் படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாய் இன்று(ஜூன் 1) மாலை நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூரி, விஜய் ஆண்டனி, மிஷ்கின், எஸ்ஜே சூர்யா, வெற்றிமாறன், பிரதீப் ரங்கநாதன், போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய வடிவேலு : உங்கள் வீட்டுப் பிள்ளையான நான் இந்த படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் எல்லோர் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும். உதயநிதி நல்ல கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஏ ஆர் ரகஹ்மான் இசையில் பாடி இருக்கிறேன், நான் பாடவில்லை அவர்தான் என்னை பாட வைத்துள்ளார். நான் எங்கும் செல்லவில்லை எல்லா நேரமும் உங்கள் பாக்கெட்டில் செல்போனில் வந்து கொண்டு தான் இருக்கிறேன்.
இந்த நேரத்தில் மறைந்த என் தாயை நினைத்துப் பார்க்கிறேன். அருமையான கதைக்களம் இது, படம் நிச்சயம் வெற்றி பெறும். தேவர் மகன் படத்துக்கு பிறகு எனக்கு மிகப்பெரிய படமாக, குணச்சித்திர வேடம் நிறைந்த கதையாக அமைந்துள்ளது. சுயமரியாதை கலந்த கதாபாத்திரம், அரசியல் படம், புதுமையான படம். உதயநிதிக்கு இது கடைசி படம் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நாள் ஹீரோவாக நடித்தார், இனி அரசியலில் ஹீரோவாக போகிறார். மக்கள் பணியை செய்யப் போகிறார்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம்'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, ... மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

kmathivanan - Trichy ,இந்தியா
06 ஜூன், 2023 - 01:24 Report Abuse
kmathivanan காமடி ஹீரோ காமடி காமடியன், அந்த நிகழ்ச்சிக்கு குடும்ப கொத்தடிமைகளோடு ஜால்ராக்கள் வேற பணம் பத்தும் செய்யும்
Rate this:
ashok - madurai,இந்தியா
03 ஜூன், 2023 - 21:28 Report Abuse
ashok கேப்டன் க்கு துரோகம் செய்த உனக்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in