Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான்கே மாதங்கள்... பரபரக்கும் அஜித் 62

09 பிப், 2023 - 17:53 IST
எழுத்தின் அளவு:
Ajith-62-shooting-full-schedule-for-4-months

துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அவர் அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது அஜித்தின் 62 வது படத்தை இயக்குவதற்கு மகிழ்திருமேனி கமிட்டாகி இருக்கிறார். அவர் சொன்ன கதையில் துணிவு படத்துக்கு இணையான ஆக்சன் காட்சிகள் இல்லாததால் சில திருத்தங்களை சொல்லி அதை சரி செய்ய சொல்லி இருக்கிறார் அஜித்குமார். அதோடு மகிழ் திருமேனிக்கு அஜித் ஒரு அதிரடி கண்டிஷனும் போட்டு இருக்கிறார்.

அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது 2023ம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜைக்கு அப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்து விட்டார்கள். அதேப்போன்று தனது 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டே படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் அஜித் குமார்.

அதோடு நான்கே மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட வேண்டும். இடையில் எந்தவித பிரேக்கும் கொடுக்கக் கூடாது என்றும் ஒரு அதிரடி கண்டிஷன் போட்டுள்ளாராம். இந்த நிலையில் அஜித் 62 ஆவது படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
போலீசாக நடிக்கும்  ரஜினிகாந்த்போலீசாக நடிக்கும் ரஜினிகாந்த் ராஜஸ்தானில் படமான ஜெயிலர் படத்தின் அதிரடி சண்டைக்காட்சி ராஜஸ்தானில் படமான ஜெயிலர் படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Logu - London,யுனைடெட் கிங்டம்
10 பிப், 2023 - 09:42 Report Abuse
Logu அஜித் அவர்கள் விஜயை போட்டியாக நினைக்கவில்லை அப்படி அவர் நினைத்து இருந்தால் விஜய் என்றோ காணாமல் போயிருப்பார்
Rate this:
தமிழன் - Tamilnadu,இந்தியா
10 பிப், 2023 - 01:30 Report Abuse
தமிழன் டிக்கெட் விலை கூடுதல் விலைக்கு விற்றால் 300 கோடி தொடுவது பெரிதல்ல உங்க கூட போட்டி போட்டு வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி தான்யா
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
09 பிப், 2023 - 21:43 Report Abuse
Easwar Kamal விஜய் என்ன செய்கிறாரோ அதையே தானும் செயது தமிழகத்தின் முன்னணி நடிகராக வளம் வர ஆசை. அது சேரி VIJAY 300 கோடி கிளப்பில் உள்ளார் அதை எப்போது அடைய.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in