Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாணி ஜெயராம் இறந்தது எப்படி? - வீட்டு பணிப்பெண் பரபரப்பு தகவல்

04 பிப், 2023 - 17:49 IST
எழுத்தின் அளவு:
How-Vani-Jayaram-dead?---house-servant-replied

சென்னை: பின்னணி பாடகி வாணி ஜெயராம், வீட்டில் தனியாக வசித்து வந்ததார். பல முறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தேன் என அவரது வீட்டில் பணிபுரிந்தவர் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 19மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் இன்று(பிப்., 4) காலமானார். தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் மலர்கொடி நிருபர்களிடம் கூறுகையில், வாணி ஜெயராம் வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக, அவரது வீட்டில் அனைத்து வேலைகளையும் நான் தான் செய்து வருகிறேன்.

இன்றைக்கு 10:45 மணிக்கு நான் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை 5 முறை அடித்தும் அவர் திறக்கவில்லை. மொபைலில் அழைத்தும் அதனை ஏற்கவில்லை. எனது கணவர் அழைத்தும் அவர் மொபைலை எடுக்கவில்லை. வீட்டின் கதவும் திறக்கப்படாததால், கீழ் வீட்டினருடன் ஆலோசித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தோம்.

அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்து கொண்டிருந்தன. எந்த நோய்க்கும் எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை. தற்போது அவரது நெற்றியில் காயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். வாணி ஜெயராம் உடல் சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛‛நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...'' நித்தம் கேட்பது உன் பாட்டு : வாணி ஜெயராம் பாடிய சூப்பர் ஹிட் பாடல் லிஸ்ட்‛‛நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...'' ... ‛சரஸ்வதி' போன்றவர் வாணி அம்மா : திரைக்கலைஞர்கள் புகழஞ்சலி, பிரபலங்கள் இரங்கல் ‛சரஸ்வதி' போன்றவர் வாணி அம்மா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in