Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன்முதலாக மராத்தி மொழியில் பாடிய சித் ஸ்ரீராம்

04 அக், 2022 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Sid-Sriram-first-time-sing-song-in-Marathi-movie

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013-ல் வெளியான கடல் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடியே என்கிற பாடலை பாடி பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். அதைத்தொடர்ந்து மறுவார்த்தை பேசாதே, உன் கூடவே பிறக்கணும் என்பது போன்று ரசிகர்களின் மனம் உருகக்கூடிய பாடல்களை தனித்துவமான குரலால் பாடி கவர்ந்த சித் ஸ்ரீராம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வானம் கொட்டட்டும் என்கிற படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக மராத்திய படம் ஒன்றில் பாடல் பாடியுள்ளார் ஸ்ரீராம்.

மராத்திய மொழியில் உருவாகியுள்ள ஹர ஹர மகாதேவ் என்கிற படத்தில் வாரே சிவா என்கிற பாடலை பாடியுள்ளார் சித் ஸ்ரீராம். அபிஜித் தேஷ்பாண்டே என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹிதேஷ் மோடாக் என்பவர் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. மராத்தி மட்டும் அல்லது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சித் ஸ்ரீராம் மராத்திய மொழியில் எனது அறிமுகத்திற்கு இதைவிட ஒரு அருமையான பாடல் கிடைத்திருக்காது என்ற தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
டிச.,9ல் திரைக்கு வரும் ரேவதி - கஜோலின் 'சலாம் வெங்கி'டிச.,9ல் திரைக்கு வரும் ரேவதி - கஜோலின் ... பூசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‛விக்ரம்' பூசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
05 அக், 2022 - 10:15 Report Abuse
Sridhar தமிழ் சினிமாவில் இவரை பயன்படுத்தமாட்டார்கள். ஏனென்று எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
04 அக், 2022 - 21:27 Report Abuse
Nallappan Kannan Nallappan Please enimale cinimavile paadathey
Rate this:
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
04 அக், 2022 - 19:33 Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan இவன் எப்படி பாடினாலும் அழுவது போலவே உள்ளது. இவனது மொக்கை குரலை கேட்டாலே எரிச்சல் வருகிறது.
Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
04 அக், 2022 - 23:26Report Abuse
Narasimhanபர்னால் வாங்கி தடவிக்க ...
Rate this:
05 அக், 2022 - 04:02Report Abuse
Karthik மிகச்சரியாகச் சொன்னீர்கள். செத்தகுரல் ஸ்ரீராம் ஒப்பாரி வைப்பதை நிறுத்தவேண்டும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in