Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல்

04 ஜூலை, 2022 - 18:35 IST
எழுத்தின் அளவு:
SS-Rajamouli-replied-when-he-is-going-to-direct-Mahabharatam-movie

பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கி ஹாலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் ராஜமவுலி. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் என்ற படம் 1100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது. அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் தனது புதிய படத்தை இயக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடுகளை மையமாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகிறது.

இந்த நிலையில் தற்போது ராஜமௌலி அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவது எப்போது? என்பது குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்ஆர்ஆர் படத்தையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் ஒரு மெகா படத்தை இயக்கப்போறேன். இந்த படத்துக்கு பிறகு நான்கு படங்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அந்த படங்களை முடித்த பிறகு தான் எனது கனவு படமான மகாபாரதத்தை இயக்குவேன். அந்த படத்தை இயக்குவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் அந்த படம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் ராஜமவுலி.

இந்த மகாபாரத படத்தை ராஜமௌலி கிடப்பில் போட்டு விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அது குறித்து தற்போது அவர் இப்படியொரு விளக்கத்தை அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாபிரமாண்டமாக நடைபெற இருக்கும் ... 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

05 ஜூலை, 2022 - 13:57 Report Abuse
கல்யாணராமன் ஏம்ப்பா, பாகுபலி படமே மகாபாரத கதையிலிருந்து சுட்டதுதானே. சுட்டதையே மறுபடி சுடப்போறாரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in