Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொங்கல் படங்கள், இன்றும் தொடரும் சோகம்

17 ஜன, 2022 - 14:16 IST
எழுத்தின் அளவு:
Pongal-films-tragedy-continues

2022ம் ஆண்டு பொங்கல் தினம் திரையுலகத்தைப் பொறுத்தவரை பெரும் சோகத்துடன்தான் ஆரம்பமாகியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் வரவில்லை என்றாலும் சில படங்கள் வெளியானதால் ஓரளவிற்கு வசூலைப் பார்க்கலாம் என தியேட்டர்காரர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால், பொங்கல் விடுமுறை நாட்களிலேயே வெளியான படங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூட மக்கள் வரவில்லை. சில படங்களுக்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சில படங்களுக்கான காட்சிகள் குறைந்த அளவு ரசிகர்களுடன் நடைபெற்றன. இது தியேட்டர்காரர்களுக்கும், அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வார சோகம் இந்த வாரமும் தொடர்கிறது. இன்று சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் பல படங்களின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

இன்றைய மற்ற காட்சிகளுக்கான முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்தால் பல தியேட்டர்களில் ஒரு டிக்கெட் கூட முன்பதிவு செய்யப்படவில்லை. சில தியேட்டர்களில் ஒற்றை இலக்கத்தில்தான் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொங்கலுக்கு வெளியான, “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர், தேள்” ஆகிய படங்களில் ஒரு படம் கூட அனைத்து ரசிகர்களுக்குமான படமாக இல்லாமல் மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கத் தவறிவிட்டது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திரையில் சமந்தாதான் சிறந்த ஜோடி: நாக சைதன்யாதிரையில் சமந்தாதான் சிறந்த ஜோடி: நாக ... ஷங்கர் - ராம்சரண் படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.200 கோடி? ஷங்கர் - ராம்சரண் படத்தின் டிஜிட்டல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
18 ஜன, 2022 - 02:10 Report Abuse
KayD எவ்ளவோ சொன்னேன் OTT ல ரிலீஸ் பண்ணுங்க னு போட்ட காசு ல சு வாவது இருக்கு. கேட்டார்களா படட்டும். பொங்கல் லீவு ல ஒரு பயல் வெளிய வர மாட்டான் னு சொல்லி இருந்தான்.. ( என்னங்கடா அங்க சத்தம் இல்லை ஐயா பொங்கல் கு தியேட்டர் பக்கம் யாரும் வர மாட்டாங்க னு சொன்னீங்க ஒரு பெரிய வரிசை பார்த்தேன் அய்யா ஏதோ டாஸ்மாக் னு ஒரு படம் ஓடுதான் தண்ணீரா பாத்தவன் குடுமபம் எல்லாம் கண்ணீரா மிதக்குதாம் அதை சொன்னேன் )
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in