Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதலீட்டை எடுத்த 'மாநாடு'

30 நவ, 2021 - 10:08 IST
எழுத்தின் அளவு:
Maanaadu-reached-capital-amount

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் 'மாநாடு'. இப்படத்திற்கு விமர்சனங்களும், வரவேற்பும் சிறப்பாக இருந்ததால் பெரும்பாலான காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே கடந்த ஐந்து நாட்களாக அமைந்தது.

முதல் இரண்டு நாட்களில் இப்படம் 14 கோடி வசூலித்தது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன் பிறகான வசூல் என்னவென்பதை அவர் அறிக்கவில்லை. ஆனால், கடந்த ஐந்து நாட்களில் இப்படம் 30 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் 30 கோடிக்குள்தான் இருக்கும் என்பதால் போட்ட முதலீட்டைத் தயாரிப்பாளர் எடுத்துவிடுவார் என்கிறார்கள். இனி வசூலாகும் தொகை படத்தின் லாபக் கணக்கில்தான் சேரும்.

மேலும், இப்படத்தின் ரீமேக் உரிமைகள் தற்போது நல்ல விலைக்கு கேட்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். ஏற்கெனவே படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை விற்றுவிட்டு படத்தை தெலுங்கிலும் டப் செய்து முடித்துவிட்டார்கள். ஆனால், படம் இன்னும் வெளியாகவில்லை. இப்போது தெலுங்கு டப்பிங்கை வெளியிடுவார்களா அல்லது அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நல்ல விலைக்குக் கேட்கப்படும் ரீமேக் உரிமையை விற்பார்களா என்பது விரைவில் தெரிய வரும்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவும் தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் திரையுலகில் தகவல் பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரம்யாவின் கனவுரம்யாவின் கனவு ஏட்டிக்குப் போட்டியாக வெளியாகும் 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' டிரைலர் ஏட்டிக்குப் போட்டியாக வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

DVRR - Kolkata,இந்தியா
30 நவ, 2021 - 16:59 Report Abuse
DVRR என்னது வெறும் ரூ 30 கோடியா அப்போ சிம்புவின் சம்பளம் அவ்வளவு குறைவா என்ன அதான் நம்ம தலை ரஜின்னா சும்மாவா படமே ரூ 300 கோடி இருக்கும்
Rate this:
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
30 நவ, 2021 - 15:43 Report Abuse
Anbuselvan அதெப்படி சொல்லறீங்க? வெள்ளையாக முப்பது கருப்பாக எவ்வுளவுன்னு தெரியலையே.
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் அது எப்படி ? தியேட்டர் டிக்கட் பணம் மொத்தமும் தயாரிப்பாளருக்கு செல்லும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in