Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா

26 செப், 2021 - 19:39 IST
எழுத்தின் அளவு:
Rashmika-denied-to-act-Dulquer-salman

குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ச்சியடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்கு மட்டுமில்லாது தமிழிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வரும் லெப்டினன்ட் ராம் என்கிற படத்தில் நடிப்பதற்காக ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். ஆனால் ராஷ்மிகா அதில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி உள்ளதாக தெரிகிறது.

காரணம் இந்த படத்தில் ஏற்கனவே மிருனாள் தாக்கூர் என்பவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்னொரு முக்கியமான, அதேசமயம் கொஞ்ச நேரமே வந்து போகின்ற இன்னொரு நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் ராஷ்மிகாவை அணுகி உள்ளார்களாம்.

அவரது காட்சி சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் கூட அனைத்தும் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட இருக்கின்றனவாம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றாலும், இப்போதுதான் முன்னணி நடிகையாக மாறி இருக்கும் நிலையில், அதில் நடிக்கத்தான் வேண்டுமா என்று தயக்கம் காட்டுகிறாராம் ராஷ்மிகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா? -  சிலாகிக்கும் லேனாநதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க ... மீண்டும் பி .உன்னிக்கிருஷ்ணன் டைரக்சனில் நடிக்கும் திலீப் மீண்டும் பி .உன்னிக்கிருஷ்ணன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in