ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரேயா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, திருமணம் தனது சினிமா கேரியருக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக, திருமணமான ஒரே மாதத்தில் மீண்டும் நடிக்க வந்து விட்டார். அதோடு, தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டேயிருப்பேன் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் பாபி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும் வெங்கி மாமா என்ற படத்தில் திருமணத்திற்கு முன்பு நடிக்கயிருந்த ஸ்ரேயாவை, நீக்கிவிட்டு, ராகுல் பிரீத் சிங்கை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், இப்போது மீண்டும் அவரரே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.