'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கர்நாடகத்தின் தற்போதைய முதல்வர் குமாரசாமியின் இரண்டாவது மனைவியாகிவிட்ட நடிகை குட்டி ராதிகா, சில காலம் நடிக்காமல் இருந்தார். இப்போது அவரது மகள் ஷாமிகா வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். தற்போது பைராதேவி என்ற பக்தி படத்தில் நடித்து வருகிறார். கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில் குட்டி ராதிகா பெண் அகோரி வேடத்தில் நடிக்கிறார்.
இதில் குட்டி ராதிகா தவிர ரமேஷ் அரவிந்த், ரங்கயாணா ரகு, ரவிசங்கா, சுசித்ரா பிரசாத் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீஜெய் இயக்குகிறார். இதில் குட்டி ராதிகா தினமும் 4 மணி நேரம் மேக்அப் போட்டு அகோரியாக நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு காசியில் நடந்து வருகிறது. முன்னதாக குட்டி ராதிகா, காசியில் ஒரு வாரம் வரை தங்கியிருந்து பெண் அகோரிகளின் நடவடிக்கைகள், மேனரிசங்கள் ஆகியவற்றை கற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.