வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமாக இன்னொரு புலி முருகன் என்கிற லெவலுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உருவாக்கியுள்ள படம் 'ஒடியன்'. இத்தனைக்கும் அறிமுக இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். வரும் டிச-14ஆம் தேதி படம் ரிலீஸாகிறது என்பதால் புரமோஷன் பணிகள் றெக்கை கட்டி பறக்கின்றன.
குறிப்பாக இந்தப்படத்தின் ரிலீசில் பிரமாண்டம் காட்டும் விதமாக உலகெங்கிலும் 4000 தியேட்டர்களில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். இதுவரை 3௦௦௦க்கும் அதிகமான தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துவிட்டதாக தகவல். அந்தவிதமாக வழக்கமாக ரிலீஸாகும் நாடுகள் மட்டுமல்லாமல் ஜப்பான், போலந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்தப்படம் வெளியாக இருக்கிறதாம்.