தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் மீன்குழம்பும் மண்பானையும்' மற்றும் மலையாளத்தில் 'பூமரம்' ஆகிய படங்களில் நடித்துள்ள காளிதாஸ் ஜெயராம், இரண்டு படங்களிலுமே சாக்லேட் பாயாக நடித்திருந்தார். இந்தநிலையில் மலையாளத்தில் வெளியான பூமரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார் காளிதாஸ்.
இந்தப்படத்திற்கு மிஸ்டர் ரௌடி என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக முரட்டுத்தனமான கெட்டப்பில் காளிதாஸ் தோன்றும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. அனேகமாக இந்தப்படம் காளிதாஸுக்கு ஒரு கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுக்கும் என நம்பலாம்.