பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டது. பிரிட்டீஷ் ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி சைரா நரசிம்ம ரெட்டி போராடியது போன்று அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் சிரஞ்சீவியுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். ஆயிரக்கணக்கான ஜூனியர் நடிகர்களும் நடித்துள்ளார்கள்.
இந்த போர்க்கள காட்சி தான் சைரா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாம். இதோடு இப்படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாம். இனிமேல் உள்ள காட்சிகள் அனைத்தையும் ஐதராபாத்தில் தான் படமாக்குகிறார்களாம். இந்த தகவலை அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.