ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகர் திலீப்பை, அவர் நடிகை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் என்கிற காரணத்துக்காக சினிமா பெண்கள் நல அமைப்பினர் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என, சங்க தலைவர் மோகன்லாலை நிர்ப்பந்தித்து வந்தனர். ஒருவழியாக சமீபத்தில் திலீப் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினமா செய்தார்.
ஆனால் நடிகர் சங்கத்திற்கு நேற்று அவர் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், “நடிகர் சங்கத்தை, சங்க உறுப்பினர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என சிலர் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு பகடைக்காயாக என்னை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர். அதை விரும்பாததால், தவறாக குற்றம் சாட்டப்பட்டு அவதூறுகளை சந்தித்து வரும் நானே முன்வந்து சங்கத்தில் இருந்து விலகியுள்ளேன்” என கூறியுள்ளார் திலீப்.