10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
கடந்த வாரம் மலையாளத்தில் மோகன்லால் - நிவின்பாலி இணைந்து நடித்த காயம்குளம் கொச்சுன்னி படம் முந்தைய பல சாதனைகளை முறியடித்து பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்து வருகிறது. ஏற்கனவே முதல்நாளில் மட்டும் கேரளாவில் 5.6 கோடி வசூலித்த அந்த சாதனையை கைப்பற்றியது. இந்தநிலையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ 34 கோடி வசூலித்துள்ளது. இதுவும் மலையாள சினிமாவுக்கு புதிய சாதனை தான்.
குறிப்பாக பாகுபலி-2, புலி முருகன் ஆகிய படங்கள் 2௦ நாட்களில் 5௦ கோடி வசூலித்தது தான் குறுகியகால சாதனையாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி பார்த்தால் பத்து நாட்களுக்குள்ளாகவே இந்தப்படம் 5௦ கோடி வசூலித்த முதல் படம் என்கிற சாதனையையும் சொந்தமாக்கி விடும் என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.