'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
மலையாள நடிகர் திலீப், தனது மனைவி மஞ்சு வாரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றார்கள். அதையடுத்து திலீப், தன்னுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட, தானும் விவாகரத்து பெற்றிருந்த நடிகை காவ்யா மாதவனை, கடந்த 2016 நவம்பரில் இரண்டாவதாக திருமணம் செய்தார்.
திலீப்-மஞ்சு வாரியாருக்கு பிறந்த மகளான மீனாட்சி, பெற்றோரின் விவாகரத்துக்கு முன்னரே தாயை விட்டு பிரிந்து திலீப்புடன் வசித்து வந்தார். சொல்லப் போனால் மகளின் ஒப்புதலுடன் தான், காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்தார் திலீப். மஞ்சு வாரியரை விட தனது சித்தியான காவ்யா மாதவனிடம் தான் மீனாட்சி அதிக ஒட்டுதலுடன் பிரியமாக இருந்து வருகிறார்..
இந்தநிலையில் காவ்யா மாதவனுக்கு நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திலீப்பின் மகள் மீனாட்சியே ஆர்வமாக முன்னின்று செய்தாராம். இந்த வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.