தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப், அதற்காக சிறை சென்று ஜாமினில் வந்தார் அல்லவா..? ஆனால் அதற்கு முன்னதாக அவர் நடித்து வந்த ராம்லீலா மற்றும் கம்மர சம்பவம் என இரண்டு படங்களும் அதன்பின் ரிலீசாகின. இந்த இரண்டு படங்களின் கதையும் இந்த வழக்கில் திலீப் சிக்கியது போன்ற நிஜ நிகழ்வுகளுடன் ஒத்துப்போவது போல ஏதேச்சையான ஒற்றுமையுடன் அமைந்திருந்தன.
இந்தநிலையில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் திலீப் தற்போது நடிக்கும் படத்திற்கு நீதி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் வக்கீலாக நடிக்கிறார் திலீப். இந்தமுறை படத்தின் கதையும் தனது சொந்த வழக்கும் ஒன்றாக இருக்கும் விதமாகவே இந்தப்படத்தின் கதையை உருவாக்க சொன்ன திலீப், நீதிமன்ற காட்சிகளில் வக்கீலாக மாறி தனது தரப்பு நியாயத்தை படத்தின் மூலம் சொல்லப் போகிறாராம்.