ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நேரம் படம் ஹிட்டான சூட்டோடு, நிவின்பாலி - நஸ்ரியாவை வைத்து ஓம் சாந்தி ஒசானா என்கிற படத்தை இயக்கியவர் ஜூட் ஆண்டனி ஜோசப். அதற்கடுத்து ஒரு முத்தச்சி கதா என்கிற படத்தை இயக்கிய இவருக்கு மற்ற படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வரவே, டைரக்சனை ஒதுக்கி வைத்துவிட்டு நடிக்க போய்விட்டார்.
சில நாட்களுக்கு முன் கேரளாவையே புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தையும் அதற்காக நடந்த மீட்பு பணிகளையும் மையமாக வைத்து தற்போது 2403 ft (2403 அடி) என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கப்போவதாக போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.
குறிப்பாக இந்தப்படம் கேரளாவில் வெள்ள நிவாரணப் பணிகளின்போது ரியல் ஹீரோக்களாக விளங்கிய மீனவர்களையும், துணை ராணுவ வீரர்களையும் கௌரவப்படுத்தும் விதமாக உருவாக இருக்கிறதாம்.