தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கார்த்தி, சாயிஷா, நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கி உள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தற்போது இதன் புரமோசனுக்காக தயாரிப்பாளர் என்ற முறையில் சூர்யாவும், ஹீரோ என்ற முறையில் கார்த்தியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். ஐதராபாத் பல்கலைகழக கலையரங்கில் நடந்த படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆந்திராவில் புகழ்பெற்ற சிம்மாசலம் அப்பண்ணா கோவிலுக்கு சென்று படம் வெற்றி அடைய சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். கார்த்தி மற்றும் சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே தங்கள் படங்களில் தாங்களே தெலுங்கில் டப்பிங் பேசுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.