டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மகேஷ்பாபுவுடன் நடித்த ஸ்பைடர் படத்தின் தோல்விக்கு பிறகு தெலுங்கில் படவாய்ப்புகளே இல்லாமல் இருந்தார் ரகுல் பிரீத் சிங். தமிழ், ஹிந்தி படங்களில் நடித்தபடி தொடர்ந்து தெலுங்கு படங்களுக்காக முயற்சி எடுத்து வந்த அவருக்கு இப்போது நாக சைதன்யாவுடன் நடிக்கும் ஒரு படவாய்ப்பு கிடைத்துள்ளது.
வெங்கடேஷ் - நாகசைதன்யா இணைந்து ஒரு மல்டி ஹீரோ படத்தில் நடிக்கிறார்கள். பாபி இயக்கும் இந்த படம் ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த படத்தில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் நாயகி இன்னும் முடிவாகாத நிலையில், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரகுல்பிரீத் சிங் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
இதற்கு முன்பு நாகசைதன்யா - ரகுல்பிரீத்சிங் ஆகிய இருவரும் ராரண்டாய் வேடுகா சுதன் என்ற படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இது அவர்கள் இணையும் இரண்டாவது படமாகும்.