பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெண் வேடத்தில் நடிப்பது என்பது நடிகர்களுக்கு சவாலான விஷயம் என்றாலும் பல நடிகர்கள் அதையும் திறம்பட செய்து முடிக்க ஆர்வம் காட்டவே செய்கிறார்கள். அந்தவகையில் பிரஷாந்த், விக்ரம் உட்பட பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்கள். தற்போது மலையாள இளம் நடிகர் உன்னி முகுந்தனும் 'சாணக்ய தந்திரம்' என்கிற படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படி பெண் வேடத்தில் மிக தத்ரூபமாக இவர் மாறியதற்கு நடிகை அனுஷ்கா கொடுத்த டிப்ஸ்கள் தான் முக்கிய காரணமாம். ஆம், பாகமதி படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த சமயத்தில் தான் ஒரு படத்தில் பெண் வேடமிட்டு நடிக்க இருப்பதாக கூறியுள்ளார் உன்னிமுகுந்தன்.
அதைக்கேட்டு ஆச்சர்யமடைந்த அனுஷ்கா, உன்னி முகுந்தனிடம் உங்களுக்கு பெண் வேடம் ரொம்ப பொருத்தமாக அமையும் என்று கூறி அதற்காக சில அழகு குறிப்புகளையும் பெண்கள் போல எப்படி பாவனை செய்ய வேண்டும் என சில ஆலோசனைகளையும் கூறினாராம்.