தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த ஆண்டு வெளியாகி வைரலான 'ஜிமிக்கி கம்மல்' பாடலாகட்டும், சமீபத்தில் புருவ அழகி மூலம் ஹிட்டடித்த 'மாணிக்ய மலராய பூவி' பாடலாகட்டும், இவை இரண்டு ஹிட்டடித்ததில் வெளியே தெரிந்தவர்கள் ஷெரில், பிரியா வாரியர் இருவரும் தான். ஆனால் இந்த பாடல்களின் வெற்றிக்கு பின்னால் பத்து ஆண்டு நட்பு உள்ளது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தப்பாடல்களுக்கு இசையமைத்தவர் ஷான் ரஹ்மான். மலையாள இயக்குனரும், நடிகருமான வினீத் சீனிவாசன் தான் இந்தப்பாடல்களை பாடியுள்ளார். இந்த இருவருக்குமான நட்பு இப்போது பத்தாவது வருடத்தை தொட்டுள்ளது.
வினீத் சீனிவாசன் நடிகராக, இயக்குனராக மாறுவதற்கு முன், ஷான் ரஹ்மான் இசையமைப்பாளராக அறியப்படும் முன்பே இருவரும் 2008ல் 'காபி @ எம்ஜி ரோடு' என்கிற ஆல்பத்தில் முதன்முதலாக இணைந்து பணியாற்றினார். அதன்பின்னர் வினீத் சீனிவாசன் இயக்கிய நான்கு படங்களிலும் ஷான் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார்.
அதுமட்டுமல்ல வினீத் சீனிவாசன் தான் நடிக்கும் படங்களில் கூட ஷான் ரஹ்மானுக்கு இசையமைக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்துள்ளார்.. அந்தவகையில் நட்பு கூட்டணியில் பத்தாம் ஆண்டு தொட்டிருக்கும் இவர்கள், தற்போது வினீத் சீனிவாசன் நடிக்கும் 'அரவிந்தண்டே அதிதிகள்' படத்திலும் 'கண்ணே தாய்மலரே' என்கிற பாடலை உருவாக்கியுள்ளனர்.
ஜிமிக்கி கம்மல், மாணிக்ய மலரே போல இது என்ன சாதனை படைக்க காத்திருக்கிறதோ..?.