'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, தற்போது கொரட்டல்ல சிவா இயக்கும் பாரத் அனே நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார். அரசியல் கதையில் தயாராகும் இந்த படத்தில் ஆந்திரா முதலமைச்சராக நடித்துள்ளார் மகேஷ்பாபு. அப்படி அவர் முதல்வராக நடிக்கும் காட்சிகளில் அதிரடியான அரசியல் பஞ்ச் டயலாக்குகள் பேசியிருப்பதோடு ஆந்திராவின் பாரம்பரிய உடையில் தோன்றி நடித்துள்ளார் மகேஷ்பாபு. உகாதி பண்டிகையையொட்டி நேற்று இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு பாரம்பரிய உடையணிந்து மகேஷ்பாபு நடித்த முராரி, போக்கிரி படங்கள் சூப்பர் ஹிட்டாகின. அதனால் இந்த படமும் அந்த ஹிட் பட வரிசையில் இடம்பெறும் என்று மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இணையதளங்களில் கருத்து சொல்லி வருகிறார்கள். பாரத் அனே நேனு படம் ஏப்ரல் 20-ந்தேதி திரைக்கு வருகிறது.