இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
மோகன்லால் தற்போது 'காயங்குளம் கொச்சுன்னி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வருகிறார்.
இதிக்கரா பக்கி என்கிற கேரக்டரில் நடிக்கும் மோகன்லாலின் வித்தியாசமான தோற்றமும் ஆடை வடிவமைப்பும் சில் நாட்களுக்கு முன்பு வெளியானபோது பலரும் ஆச்சர்யப்பட்டனர். குறிப்பாக நிறைய பேர் மோகன்லாலின் இந்த தோற்றம், கிரேக்க வீரரை ஞாபகப்படுத்துவதாக கூறியுள்ளார்கள்..
இதுபற்றி படத்தின் கதாசிரியரான சஞ்சய் கூறும்போது, இந்தப்படத்தில் மோகன்லாலின் கெட்டப்புக்காக சுமார் 25 விதமான ஸ்கெட்ச்சுகள் போடப்பட்டன. அதில் இயக்குனர் தான் மனதில் நினைத்து வைத்திருந்த மாதிரியான உருவம் தான் தற்போது மோகன்லால் மூலமாக உயிர் பெற்றுள்ளது என கூறியுள்ளார்.