ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஆதி'. இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை தனது பேஸ்புக் பக்கம் மூலமாக லைவ் செய்தார் மோகன்லால்.
இதற்கு முன்னதாக நேற்று இரவு மம்முட்டி தனது வீட்டில் மோகன்லால் குடும்பத்தினருக்கு விருந்து அளித்தார். அப்போது படம் குறித்து பல விஷயங்களை மோகன்லாலிடம் கேட்டறிந்தார்.
அதன்பின் தனது முகநூலில், “என் கண்முன்னால் வளர்ந்த பையன், எங்க வீட்டுப்பிள்ளை அப்பு (பிரணவ்) ஹீரோவாக அறிமுகமாகிறான். அவன் இந்த துறையில் தனது தந்தையைப் போலவே மிகப்பெரிய சாதனைகளை செய்வான் என்பது உறுதி. ஆதி படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என வாழ்த்தியுள்ளார் மம்முட்டி