புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
மலையாள சினிமாவின் மிக முக்கியமான காமெடி நடிகராக வலம்வருபவர் தான் நடிகர் சௌபின் சாஹிர். பிரேமம் படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான இவர், துல்கருடன் தொடர்ந்து 5 படங்களில் நடிக்கும் அளவுக்கு அவரது நெருங்கிய நண்பர். சமீபத்தில் துல்கர் நடித்த 'பறவ' என்கிற படத்தையும் இயக்கினார்.
அதுமட்டுமல்ல, மகஷிண்டே பிரதிகாரம் படத்தில் பஹத் பாசிலுடனும் காமெடி கூட்டணி அமைத்து வெற்றி கண்டதை தொடர்ந்து, தற்போது அவருடனும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் சௌபின் சாஹிர்.
அடிப்படையில் உதவி இயக்குனரான இவர், ஒரு படம் இயக்கிவிட்டுத்தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் இவருக்கும் இவரது நீண்டநாள் தோழியான ஜமீலாவுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.