ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த வருடம் தெலுங்கில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்த மோகன்லாலின் நடிப்பை பாராட்டி, 2016ஆம் வருடத்திற்கான சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து தற்போது மோகன்லால் ஜனதா கேரேஜ் டீமுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள செய்தியில், “ஏற்கனவே தெலுங்கு ரசிகர்கள் என்மீது காட்டிய அன்பால் என்னை அங்கீகரித்து விட்டார்கள்.. தற்போது இந்த விருது அதற்கு அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைந்துள்ளது. இந்த விருதுக்காக ஆந்திர அரசுக்கும், ஆந்திர மக்களுக்கும் ஜூனியர் என்.டி.ஆர், கொரட்டால சிவா உள்ளிட்ட ஜனதா கேரேஜ் படக்குழுவினருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.