அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிருத்விராஜ் தற்போது நடித்து முடித்துள்ள 'விமானம்' படம் வரும் நவம்-1௦ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார். அந்த ஷாஜியின் கதைதான் இப்போது பிருத்விராஜின் 'விமானம்' படமாக உருவாகி வருகிறது. ஷாஜி கேரக்டரில் தான் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். பத்திரிகையாளரான பிரதீப் நாயர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் பிருத்விராஜின் ஜோடியாக பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண் கேரக்டரில் கிளாசிக்கல் டான்சரான துர்கா லட்சுமி நடித்துள்ளார். இப்போது இந்தப்படத்தில் டீனேஜ் பெண்ணிற்கு தந்தையாக பிருத்விராஜ் நடித்துள்ளார் என்கிற புதிய தகவல் வெளியாகியுள்ளது.. கடந்த வருடம் வெளியான 'ஆனந்தம்' பட ஹீரோயின்களில் ஒருவராக நடித்த அனார்கலி தான் பிருத்விராஜின் மகளாக நடிக்கிறார். இந்தப்படம் பிருத்விராஜின் இரண்டு கட்ட வாழ்க்கையை சொல்கிறதாம். ஒரு டீனேஜ் பெண்ணிற்கு பிருத்விராஜ் தந்தையாக நடிப்பது இதுதான் முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது..