ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே ராபின் ஹூட் போலவே வாழ்ந்த திருடன் தான் 'காயம்குளம் கொச்சுண்ணி'. பயங்கர கொள்ளையனான அவனுடைய வாழ்க்கை வரலாற்றைத்தான் 'காயங்குளம் கொச்சுண்ணி' என்கிற பெயரில் படமாக்கி வருகிறார் '36 வயதினிலே' புகழ் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். 'காயம்குளம் கொச்சுண்ணி' கேரக்டரில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.
காயம்குளம் கொச்சுண்ணி என்பவன் கேரளா பார்டரை விட்டு தாண்டி வந்து தமிழக எல்லைப்பகுதியில் திருடுவதில் பெயர் போனவன். அதிலும் களரி சண்டையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பார்கள். அதனால் இந்த கேரக்டரில் நடிக்கும் நிவின்பாலியும் இந்தப்படத்திற்காக களரி சண்டை பயிற்சியெல்லாம் கற்றுக்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாபு ஆண்டனியும் நிவின்பாலியுடன் சேர்ந்து இந்த கொச்சியில் களரிப்பயிற்சி எடுத்து வருகிறார். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக இது உருவாகி வருகிறது..