மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து புகழ்பெற்ற சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்து அங்கேயும் பிரபலமாகி விட்டார். அதனால் தற்போது தெலுங்கில் நானியுடன் எம்சிஏ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கரு படத்திலும் நடிப்பவர், மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இப்படி தெலுங்கிலும் அறிமுகமான முதல் படத்திலேயே சாய் பல்லவி பிரபமாகி விட்டதால் அவரது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு மலையாளத்தில் துல்கர்சல்மானுடன் இணைந்து அவர் நடித்த காளி படத்தை தற்போது தெலுங்கில் வெளியிட டப்பிங் செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிடுகிறார்கள். இந்நிலையில், தெலுங்கில் அந்த படத்திற்கு டைட்டில் அறிவிக்காத நிலையில், நேற்று ஹேய் பிள்ளகடா என்று அறித்துள்ளனர். இதை சாய் பல்லவி நடித்த பிடா படத்தை இயக்கிய சேகர் கம்முலா வெளியிட்டுள்ளார்.