இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி-2 படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள படம் பாக்மதி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. ஜெயராம், உன்னி முகுந்தன் போன்ற மலையாள நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவரும் இப்படத்தை அடுத்து ஆண்டு சங்கராந்திக்குத்தான் வெளியாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது முன்கூட்டியே பாக்மதி திரைக்கு வருவதாக சொல்கிறார்கள்.
காரணம், 2018 சங்கராந்திக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகிறதாம். அதனால் மெகா நடிகர்களுடன் மோத வேண்டாம் என்பதற்காக வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் அனுஷ்காவின் பாக்மதியை வெளியிடுகிறார்களாம். மேலும், அன்றைய தினத்தில் பாக்மதி படத்துடன் நானியின் எம்சிஏ, விக்ரம்குமார் இயக்கத்தில் அகில் நடித்துள்ள இரண்டாவது படங்களும் வெளியாகிறதாம்.