அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மலையாள சினிமாவின் பாக்ஸ் ஆபீசில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது 'சங்க்ஸ்' என்கிற திரைப்படம். மிகப்பெரிய நட்சத்திரங்களோ, டெக்னீஷியன்களோ இந்தப்படத்தில் இடம் பெறவில்லை. ஆனால் வசூல் பத்து கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள்.
கடந்த வருடம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இதேப்போல செமத்தியாக கல்லா கட்டிய 'ஹேப்பி வெட்டிங்' படத்தை இயக்கிய ஓமர் தான் இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார். ஹனிரோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் கதை இளைஞர்களை ரொம்பவே ஈர்க்கும் அம்சத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதுதான் தியேட்டர்களில் கூட்டத்திற்கு காரணம். கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினீரிங் பிரிவில் படிக்கும் அத்தனை பையன்கள் மத்தியில் ஒரே ஒரு மாணவியாக சேரும் ஹனிரோஸ், அங்கு உடன் படிக்கும் நான்கு மாணவர்களின் காதல் கலாட்டாக்களை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம். இதை காமெடி அம்சங்களுடன் கலாட்டாவாக சொல்லியிருப்பதால் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.