ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு ஹீரோக்களின், 'மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக' வலம் வந்த ரகுல் ப்ரீத்சிங்கிற்கு, சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அனு இமானுவேல், தெலுங்கு ஹீரோக்களின் மனதில் அழுத்தமாக இடம் பிடித்து விட்டார்.
மஞ்சு, ஆக்ஸிஜன் ஆகிய படங்களை தொடர்ந்து, அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் நடிகர்களில் ஒருவரான, அல்லு அர்ஜுனுடன், நா பேரு சூர்யா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து, துப்பறிவாளன் படத்தின் மூலம், தமிழிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். 'நான், மலையாளியாக இருந்தாலும், படித்தது எல்லாம் அமெரிக்காவில் தான், ஹிந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது தான், என் லட்சியம்' என்கிறார், அனு.