தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாக தமிழ்ப்பட விழாக்களில், அதிலும் தான் சம்பந்தப்பட்ட படங்களின் விழாக்களில் கூட இளையராஜா கலந்துகொள்வது அரிதாகி வருகிறது. தனது மனதுக்கு நெருக்கமான படமாக இருந்தால் மட்டுமே விழாவில் கலந்து கொள்கிறார். அப்படி கலந்துகொண்டாலும் எதுவும் பேசாமல் கிளம்பி விடுகிறார்.
இந்தநிலையில் கேரளாவில் நடைபெற உள்ள மலையாள படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார் இளையராஜா. படத்தின் பெயர் 'கிளிண்ட்'. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(ஜூலை 21) மாலை எர்ணாகுளம் கோகுலம் கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது. உன்னி முகுந்தனும் ரீமா கல்லிங்கலும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை ஹரிகுமார் என்பவர் இயக்கியுள்ளார். சலீம்குமார், ரெஞ்சி பணிக்கர், ஜாய் மேத்யூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இதில் ஒரு ஆச்சர்யம் என்றால் படத்தின் கிளிண்ட் ஆக நடிக்கும் சிறுவனின் அப்பா, அம்மாவாக உன்னி முகுந்தனும் ரீமா கல்லிங்கலும் நடித்தாலும் கூட, அந்த சிறுவனின் உண்மையான பெற்றோரும் வேறு முக்கியமான வேடங்களில் இந்தப்படத்தில் நடிக்கின்றனராம்