ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கடந்த சில நாட்களுக்கு முன் நீளமான முடியை அழகாக கொண்டை போட்டபடி இருந்த துல்கர் சல்மானின் புதிய லுக் சோஷியல் மீடியாவில் வைரலாகி பரவியது.. இப்போது லேட்டஸ்ட்டாக அந்த லுக்கிற்கு முற்றிலும் மாறாக ஒட்ட வெட்டிய முடியுடன் ஆர்மி லுக்கில் துல்கர் சல்மான் காட்சியளிக்கும் புதிய லுக் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.. இதில் என்ன விசேஷம் என்றால் இந்த இரண்டு கெட்டப்புக்களும் துல்கர் தற்போது நடித்துவரும் 'சோலோ' படத்திற்காகத்தான்.
அதுமட்டுமல்ல, இன்னொரு கெட்டப்பும் இந்தப்படத்தில் இருக்கிறதாம். விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து தமிழில் 'டேவிட்' என்கிற படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். டேவிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நாசரும் இந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்..