டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் மிகவும் பரபரப்பாக தயாராகி வருகிறது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் 'வில்லன்' படம். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் என்பதால் இந்தப்படத்தை எப்படியும் ஹிட்டாகி விடவேண்டும் என ராப்பகல் பாராமல் உழைத்து வருகிறார் படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். ஏற்கனவே மோகன்லால் நடித்துள்ள மூன்று படங்களை இயக்கியுள்ள இவர், இந்தப்படம் முடிந்ததும் கூட, ஒரு சிறிய இடைவெளிவிட்டு அடுத்ததாகவும் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்கும் அளவுக்கு மோகன்லாலின் தீவிர பக்தர்.
தற்போது 'வில்லன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதில் விஷால், ஹன்ஷிகா உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். தற்போது வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கும் மோகன்லால், கேரளா திரும்பியதும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஒரே தம்மில் நடைபெற இருக்கிறதாம். முதலில் இந்தப்படத்தை ஜூலை-28 ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தவர்கள், தற்போது ஒருவாரம் முன்னதாக ஜூலை-21ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய தேதி குறித்துவிட்டார்கள்.