தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்த சம்மரில் ஒருமாத பயணமாக தனது மனைவி காவ்யா மாதவன் மற்றும் மகள் மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு கிளம்பி விட்டார் மலையாள நடிகர் திலீப். இந்தமுறை அமெரிக்க செல்வது அங்கே ஒரு மாதம் திலீப் ஷோ-2017வை நடத்துவதற்காக அதனாலேயே இந்த வருடம் சம்மர் சீசனுக்கு திலீப் தனது பட ஷூட்டிங் எதையும் கமிட் பண்ணிக்கொள்ளவில்லை. கம்மார சம்பவம் மற்றும் புரபெஷர் டிங்கன் என தான் நடித்துவந்த இரு படங்களையும் ஏறத்தாழ முடித்துவிட்டார் திலீப்.
இந்த திலீப் ஷோ-2017 நிகழ்ச்சியில் முக்கியமான நபராக கலந்துகொள்வதாக வாக்களித்திருந்தார் நடிகை மம்தா மோகன்தாஸ். ஆனால் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக திலீப்பின் மனைவியான நடிகை காவ்யா மாதவன் பங்கு பெறுகிறாராம்.. வெறும் பார்வையாளராக மட்டுமே இந்த டூரில் கலந்துகொள்ள சம்மதித்த காவ்யாவை திலீப் தான் கன்வின்ஸ் செய்து சம்மதிக்க வைத்தாராம். இந்த நிகழ்ச்சியை இயக்குபவர் திலீப்பின் நண்பரும் பிரபல மலையாள இயக்குனரான நாதிர்ஷா தான். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளவர் அமெரிக்காவில் உள்ள திலீப்பின் நண்பர் ஒருவராம். இந்த நிகழ்சியில் மலையாள திரையுலகை சேர்ந்த இன்னும் சில நட்சத்திரங்களும் கலந்துகொள்கிறார்கள்.