'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தானம் ஹீரோவாகி விட்டதாலும், சூரி பிசியான காமெடியனாகி விட்டதாலும் காமெடி நடிகர் சதீஷின் காட்டில் நல்ல மழை தான்.. விஜய் படங்களில் தொடர்ந்து இடம்பெறும் அளவுக்கு வளர்ந்துவிட்ட சதீஷுக்கு இப்போது மலையாள திரையுலகிலும் இருந்து வாய்ப்பு தேடிவந்துள்ளது.. துல்கர் சல்மான் நடிப்பில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகும் 'சோலோ' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சதீஷ்..
விக்ரம்-ஜீவா நடித்த 'டேவிட்' படத்தை இயக்கிய அதே பிஜாய் நம்பியார் தான் இந்தப்படத்தின் டைரக்டர். தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தற்போது கொச்சியில் முகாமிட்டுள்ளார் சதீஷ்.. இதற்கு முன் நடிகர் சந்தானமும் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'சலாலா மொபைல்ஸ்' படத்தில் காமெடியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.