ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மோகன்லால் நடிக்க மீண்டும் ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்'..மேஜர் ரவி இயக்கியுள்ள இந்தப்படத்தில் மோகன்லால் தனது வழக்கமான கதாபாத்திரமான மேஜர் மாகாதேவன் ஆகவே நடித்துள்ளார்.. போனஸாக அவரது தந்தை கேரக்டராக மேஜர் சகாதேவன் என இன்னொரு சர்ப்ரைஸ் கேரக்டரிலும் அவரே நடித்துள்ளார். இந்தப்படம் 1971ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.. வழக்கம்போல படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ராணுவ பின்னணியில் தான் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தப்படத்திற்காக ராணுவ பீரங்கி வண்டி ஒன்றை மோகன்லாலே ஓட்டியுள்ளார்... இதுபற்றி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள மோகன்லால், “இதற்குமுன் நான் பலவிதமான வாகனங்களை, ஏன் விமானங்களை கூட ஓட்டுவதுபோன்ற காட்சிகளில் நடித்துள்ளேன்.. ஆனால் முதன்முறையாக இந்தப்படத்திற்காக பீரங்கி வண்டியை நானே ஓட்டியுள்ளேன்.. இதற்குமுன் இப்படி எந்த மலையாள சினிமாவிலும் வந்ததாக ஞாபகம் இல்லை.. ஆனால் எது ஒன்றையும் நீங்கள் முதல் ஆளாக செய்யும்போது ஏற்படும் ஓரு த்ரில் இருக்கிறதே.. அதை நானும் அனுபவித்தேன்” என கூறியுள்ளார் மோகன்லால். இந்தப்படம் வரும் ஏப்-7ஆம் தேதி வெளியாகிறது..