சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மார்ச் 24ல் திரைக்கு வந்த கட்டமராய்டு திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ 42 கோடி வசூல் செய்ததாக அறிவித்துள்ளனர். பவன் கல்யாணின் அதிரடி ஆக்ஷன், மற்றும் பஞ்ச் வசனங்களுடன் வெளிவந்துள்ள கட்டமராய்டு திரைப்படத்தை இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ளார். உமைர் சந்து தனது டுவிட்டர் பக்கத்தில் கட்டமராய்டு உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ 42 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முதல் நாளில் ரூ 24.05 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அஜித் நடிப்பில் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கிய வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடித்துள்ளார். இவர்களுடன் சிவ பாலாஜி, அலி, கமல் காமராஜூ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.