வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
எவ்வளவுதான் ஆடம்பரமான விஷேசம் என்றாலும் வாழையிலை இல்லாத கல்யாண விருந்தை நினைத்தாவது பார்க்க முடியுமா..? அதேபோலத்தான் மலையாள திரையுலகம் தனது தோற்றங்களை நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஏற்ப அப்டேட் பண்ணிக்கொண்டாலும் எத்தனை புதுமுக நடிகர்கள் வந்தாலும் எவர்கிரீன் சாக்லேட் ஹீரோ குஞ்சாக்கோ போபனுக்குன்டான இடம் இன்னும் அப்படியதான் இருக்கிறது.. ஆம். நேற்றுடன் மலையாள சினிமாவில் அவர் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக இருபது வருடங்களை நிறைவு செய்துவிட்டார்.
1997ல் பாசிலின் இயக்கத்தில் வெளியான 'அனியத்திபிறா' படத்தின் மூலம் அறிமுகமான குஞ்சாக்கோ போபன் இந்த இருபது வருடங்களில் சுமார் 75 படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஏற்ற இறக்கங்களை அவர் சந்தித்து வந்தாலும் திடீரென ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து அவரது படம் சூப்பர்ஹிட்டாகி அவரது மார்க்கெட்டை நிலைகுலையாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இவரது ஹிட் படங்கள் வரிசையில் அனியத்திபிறா, கஸ்தூரிமான், குல்மால், எல்சம்மா என்ன ஆண்குட்டி, ஆர்டினரி ஆகிய படங்கள் குஞ்சாக்கோ போபனை கைவிடாமல் பார்த்துக்கொண்டன. இந்த இருபதாம் வருடத்திய நிறைவாக குஞ்சாக்கோ நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள 'டேக் ஆப்' படம் மிகுந்த வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.